இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 315

அறத்துப்பால் (Virtue) - இன்னாசெய்யாமை (Not doing Evil)

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.

பொருள்: மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.

What does a man from wisdom gain
If he pines not at other's pain?

English Meaning: What benefit has he derived from his knowledge, who does not endeavour to keep off pain from another as much as from himself ?