குறள் தேனீ போட்டி நடைமுறை

Eligibility

அரும்புகள்
அரும்புகள்
8 வயது வரை
Up to 8 years old as of June 30th
35 திருக்குறள்கள்
மொட்டுகள்
மொட்டுகள்
12 வயது வரை
Up to 12 years old as of June 30th
70 திருக்குறள்கள்
மலர்கள்
மலர்கள்
17 வயது வரை
Up to 17 years old as of June 30th
100 திருக்குறள்கள்

குறள் தேனீப் போட்டிகான குறள்களின் பட்டியல்

குறள் தேனீப் போட்டி விதிமுறைகள்

குறள் தேனீ போட்டி விதிமுறைகள்

போட்டிக்கான திருக்குறள்கள்

குறள்களை வரிசைப்படி அச்சிடும் வசதி இந்த இணையத்தளத்தில் வழங்கப்பட்டுள்ளது: திருக்குறள் அச்சிடும் வசதி

போட்டியின் நோக்கம்

குறள் தேனீ என்பது திருக்குறள்களைப் படிக்க ஊக்குவிக்கும் போட்டி ஆகும். தமிழர்களின் மறைநூலான திருக்குறளை நம்முடைய அடுத்தத் தலைமுறைக்கு அறிமுகம் செய்வதே நம்முடைய நோக்கம்.

போட்டியின் விதிகள் மற்றும் நடைமுறை

  • போட்டியின் விரிவான விவரங்கள் "அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - FAQ" பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன - https://kuraltheni.com/faq/
  • கொடுக்கப்பட்டுள்ள திருக்குறள்களை போட்டியாளர்கள் எந்த வரிசையிலும் கூறலாம்.
  • அனைத்து போட்டியாளர்களும் தாங்கள் கூறவிருக்கும் திருக்குறள்களின் வரிசையை அச்சிட்ட நகல் அல்லது PDF ஆக முன்கூட்டியே வழங்குவது கட்டாயம்.

போட்டியின் கட்டமைப்பு

  • வட்டார மற்றும் மண்டலச் சுற்றுப் போட்டிகள்
  • மண்டலச் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெறும் போட்டியாளர்கள் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்
  • அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெறும்
  • இறுதிச் சுற்று தவிர, அனைத்து சுற்றுப் போட்டிகளும் இணையவழியில் நடைபெறும்

இறுதிச்சுற்றுப் போட்டி நடைபெறும் இடம்

இறுதிச்சுற்றுப் போட்டிகள் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 38வது தமிழ் விழாவில் நடைபெறும்.
பேரவை விழா குறித்த விவரங்களுக்கு: FeTNA 38வது தமிழ் விழா

போட்டியின் நடைமுறைகள்

  • வட்டாரச்சுற்று (Regionals) - மாணவர்கள் தாங்கள் கற்ற குறள்களை வரிசையாகக் கூற வேண்டும்.
  • மண்டலச்சுற்று (Zonals) திருக்குறளின் பொருள் சார்ந்த கேள்விகள்
  • ஒரு குறளின் "தொடக்கச் சொல்" கூறி குறளைக் கூற சொல்லுதல்.
  • ஒரு குறளின் அதிகாரத்தை கொடுத்து அதற்கான திருக்குறள்களை கூறச் சொல்லுதல்.
  • ஒரு குறளின் இறுதிச்சொல் கொடுத்து அதற்கான திருக்குறளை கூறச் சொல்லுதல்.
  • குறளுக்கு பொருளைக் கூறுதல். மனப்பாடம் செய்யாமல் ஒரு குறளின் பொருளை உணர்ந்து கூறுபவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
  • Story Telling and Presentation during one of the rounds
  • சமன்முறிவுச் சுற்றுகளில் (Tiebreaker), படங்களைப் பார்த்து திருக்குறள் கூறுதல் போன்ற போட்டிகளும் நடைபெறும்.

உதாரணமாக கேட்கப்படும் கேள்விகள்

  • அகர என்னும் வார்த்தையில் தொடங்கும் குறள் கூறுங்கள்.
  • அறம் என்ற வார்த்தையில் முடியும் குறள் கூறுங்கள்.
  • கல்வி அதிகாரத்திலிருந்து ஒரு குறள் கூறுங்கள்.
  • நன்றி பற்றிய திருக்குறள் கூறுங்கள்.

மதிப்பீடு மற்றும் தகுதித் தேர்வு

  • அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் அடுத்தச் சுற்றுக்கு தகுதிப் பெறுவார்கள்.
  • நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Judging Criteria

  • சரியாகக் கூறுதல் (Correctness)
  • சரளமாகக் கூறுதல் ( Fluency)
  • சரியான உச்சரிப்பு (Pronunciation)