திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 453
பொருட்பால் (Wealth) - சிற்றினம் சேராமை (Avoiding mean Associations)
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் இன்னான் எனப்படுஞ் சொல்.
பொருள்: மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.
Wisdom depends upon the mind The worth of man upon his friend.
English Meaning: The power of knowing is from the mind; (but) his character is from that of his associates.