திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 466
பொருட்பால் (Wealth) - தெரிந்து செயல்வகை (Acting after due Consideration)
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்.
பொருள்: ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.
Doing unfit action ruins Failing fit-act also ruins.
English Meaning: He will perish who does not what is not fit to do; and he also will perish who does not do what it is fit to do.