திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 931
பொருட்பால் (Wealth) - சூது (Gambling)
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.
பொருள்: வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுகினாற் போன்றது.
Avoid gambling, albeit you win Gulping bait-hook what does fish gain?
English Meaning: Though able to win, let not one desire gambling; (for) even what is won is like a fish swallowing the iron in fish-hook.