திருவள்ளுவர்: வாழ்க்கை, படைப்பு மற்றும் தாக்கம்

திருவள்ளுவர் (அல்லது வள்ளுவர்) தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த அறநூலான திருக்குறளை எழுதியவர். இவர் ஒரு புலவர், தத்துவஞானி. திருக்குறள் 58க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

 

வரலாற்றுப் பின்னணி

திருவள்ளுவரின் வாழ்க்கை குறித்து ஆதாரப்பூர்வமான வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கவில்லைஅவரது உண்மையான பெயர்பிறப்பிடம்காலம் போன்றவை பற்றிய குறிப்புகள் திருக்குறளில் இடம்பெறவில்லைமுதன்முதலாகதிருவள்ளுவ மாலை” (பல புலவர்களின் பாடல் தொகுப்புஎன்ற நூலில் “திருவள்ளுவர்” என்ற பெயர் குறிப்பிடப்படுகிறதுஇந்நூல் பொ.. (CE) 1ஆம் நூற்றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த பாடல்களைக் கொண்டதுபிரெஞ்சு அறிஞர் எஸ்ஏரியல் திருக்குறளை “The book without a name by an author without a name” (பெயரற்ற ஓர் ஆசிரியரின் பெயரற்ற நூல்என்று விவரிப்பது குறிப்பிடத்தக்கது.

 

வாழ்க்கை மற்றும் காலம்

திருவள்ளுவரின் வாழ்க்கை குறித்து பல்வேறு கதைகள் மற்றும் கருதுகோள்கள் உள்ளன:

  • பிறப்பிடம்: மதுரை, மயிலாப்பூர் எனப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.
  • சமூகப் பின்னணி: வள்ளுவர் குலத்தைச் சேர்ந்த நெசவாளர் அல்லது வேளாளர் என்று கூறப்படுகிறது.
  • காலம்: பொ..மு. (BCE) 4ஆம் நூற்றாண்டு முதல் பொ.. (CE) 1ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
  • தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு: 1935-ல், பொ.ஆ.மு. 31ஐ திருவள்ளுவர் ஆண்டாக அறிவித்தது.
  • திருவள்ளுவர் ஆண்டுதிருவள்ளுவர் ஆண்டு என்பது நடப்பு ஆண்டில் 31-ஐ கூட்டுவதால் கிடைக்கும். உதாரணமாக நடப்பு ஆண்டு 2025 என்றால், திருவள்ளுவர் ஆண்டு 2056 ஆகும்.

 

திருக்குறள் அரங்கேற்றம்

திருவள்ளுவர் தனது திருக்குறளை இயற்றிய பின், மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்யச் சென்றார். பாண்டிய மன்னர், அமைச்சர்கள் மற்றும் புலவர்கள் முன்னிலையில் தனது நூலை ‘முப்பால்’ என்ற பெயரில் சமர்ப்பித்தார். இலக்கண விதிகளைக் கடுமையாகப் பின்பற்றும் மரபுடன் இருந்த சங்கப் புலவர்கள், நான்கடி வெண்பாவுக்குப் பதிலாக ஈரடிகளில் அமைந்த குறள் வடிவம் இலக்கணப் பிழை எனக் கருதி முதலில் இந்நூலை ஏற்க மறுத்தனர்.
 
இந்நிலையில், ஔவையார் தலையிட்டு, “இலக்கணத்தின் கடுமையை விட அதன் உள்ளார்ந்த அறிவுரையின் மெய்ப்பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும்” என வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து திருக்குறள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ‘திருவள்ளுவ மாலை’ என்ற நூலில் பாடல்கள் உள்ளன.
 
“அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்” என ஒளவையார் திருக்குறளைப் போற்றுகிறார்.

 

திருவள்ளுவரின் முக்கியத்துவம்

திருவள்ளுவர் குறித்த பல உறுதியான தகவல்கள் இல்லாவிட்டாலும், திருவள்ளுவர் தமிழ் சமுதாயத்தின் மிக முக்கியமான ஓர் அடையாளமாக உள்ளார். தமிழ் மொழி, அறம், இலக்கியம் போன்றவற்றின் அடையாளமாக திருவள்ளுவர் இருக்கிறார். அமெரிக்காவில் பல தமிழ்ச்சங்கங்களும், தமிழ்ப் பள்ளிகளும் திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றன. திருவள்ளுவர் தினம் – தை மாதம் 2 (ஜனவரி 15/16) அன்று உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகளால் கொண்டாடப்படுகிறது.
 
தமிழ்நாடு அரசு திருவள்ளுவரின் நினைவிடமாக 1976-ல் சென்னையில் ‘வள்ளுவர் கோட்டம்’ கட்டியது.  2000 ஜனவரி 1-ல் கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த இடத்தில் அரபிக் கடல், வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் சந்திக்கின்றன. 133 அடி உயரம் திருக்குறளின் 133 அதிகாரங்களைக் குறிக்கிறது. சிலையின் மூன்று விரல்கள் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பகுதிகளைக் குறிக்கின்றன.

 

திருக்குறள் மொழிபெயர்ப்புகள்

  • முதல் மொழிபெயர்ப்பு: மலையாளம் (1595).
  • லத்தீன் மொழிபெயர்ப்பு: கான்ஸ்டாண்டியஸ் ஜோசப் பெஸ்சி (வீரமாமுனிவர், 1730) – அறம், பொருள் ஆகிய இரண்டு பாக்களை மட்டும் மொழி பெயர்த்தார். இன்பத்துப்பால் மொழி பெயர்க்கப்படவில்லை.
  • தொடர்ந்து ஆங்கிலம், ஜெர்மனி மொழிகளில் பல மொழிபெயர்ப்புகள்.
  • முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்பு: ஜி.யு. போப் (1886). இந்த மொழிபெயர்ப்பு ஐரோப்பிய நாடுகளில் திருக்குறளை பெரிய அளவில் கொண்டு சென்றது.
  • தற்போது 58 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • அனைத்து உலக மொழிகளிலும் மொழிபெயர்க்க தமிழ் நாடு அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

திருக்குறளின் தாக்கம்

  1. மதச்சார்பற்ற நூல் – அனைத்து பிரிவினருக்கும் இணக்கமான நூல்.
  2. அகிம்சைக் கோட்பாடு – திருக்குறளின் அகிம்சை கோட்பாடு மகாத்மா காந்தியைப் பெரிதும் பாதித்தது.
  3. உலகப் பொதுமறை – மனிதநேயம், அறம், அரசியல், பொருளாதாரம் போன்றவற்றை உள்ளடக்கியது.
  4. உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் திருக்குறளும் ஒன்று. பல அறிஞர்களால் மொழிபெயர்க்கப்பட்டு விவாதிக்கப்பட நூல். 

முடிவுரை

திருக்குறள் தமிழர்களின் மறைநூலாகவும், அனைவருக்கும் பொதுவான அறநூலாகவும் விளங்குகிறது. திருவள்ளுவரின் திருக்குறள் ஒரு நூலாக மட்டுமல்ல, வாழ்வின் வழிகாட்டியாக இன்றும் விளங்குகிறது.