Contest Details
Eligibility
8 வயது வரை
Up to 8 years old as of June 30th
35 திருக்குறள்கள்
12 வயது வரை
Up to 12 years old as of June 30th
70 திருக்குறள்கள்
17 வயது வரை
Up to 17 years old as of June 30th
100 திருக்குறள்கள்
குறள் தேனீப் போட்டி - குறள்களின் பட்டியல்
குறள் தேனீப் போட்டி விதிமுறைகள்
குறள் தேனீப் போட்டி விதிமுறைகள்
போட்டிகளுக்கான திருக்குறள்கள்
- அரும்புகள் பிரிவு: 35 திருக்குறள்கள் - குறள்களின் பட்டியல்
- மொட்டுகள் பிரிவு: 70 திருக்குறள்கள் - குறள்களின் பட்டியல்
- மலர்கள் பிரிவு: 100 திருக்குறள்கள் - குறள்களின் பட்டியல்
- Additional Kurals may be assigned for later rounds following the Zonal stage.
குறள்களை வரிசைப்படி அச்சிடும் வசதி இந்த இணையத்தளத்தில் வழங்கப்பட்டுள்ளது: திருக்குறள் அச்சிடும் வசதி
போட்டியின் நோக்கம்
குறள் தேனீ என்பது திருக்குறள்களைப் படிக்க ஊக்குவிக்கும் போட்டி ஆகும். தமிழர்களின் மறைநூலான திருக்குறளை நம்முடைய அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்வதே நம்முடைய நோக்கம்.
போட்டியின் விதிமுறைகள் மற்றும் நடைமுறை
- போட்டியின் விரிவான விவரங்கள் மற்றும் விதிமுறைகள் : https://kuraltheni.com/rules2026/
- கொடுக்கப்பட்டுள்ள குறள்களைப் போட்டியாளர்கள் எந்த வரிசையிலும் கூறலாம்.
- அனைத்து போட்டியாளர்களும் தாங்கள் கூறவிருக்கும் குறள்களின் வரிசையை குறள் தேனீ இணையத்தளம் மூலமாக எங்களுக்கு அனுப்ப வேண்டும். இதற்கென ஒரு தனிப் பக்கம் வழங்கப்படும்.
போட்டியின் கட்டமைப்பு
- வட்டார சுற்றுப் போட்டிகள் : திருக்குறள் ஒப்பித்தல் சுற்று
- மண்டல சுற்றுப் போட்டிகள் : திருக்குறள் சார்ந்த கேள்வி பதில்கள்
- மண்டல சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெறும் போட்டியாளர்கள் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறுவார்கள். தொடர்ந்து அரையிறுதி மற்றும் இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெறும்
- அரையிறுதி வரை அனைத்து சுற்றுப் போட்டிகளும் இணையவழியில் நடைபெறும்
- அனைத்துச்சுற்றுப் போட்டிகளிலும் பங்கேற்கும் மற்றும் பெற்றிப் பெற்ற போட்டியாளர்களுக்கு இணைய வழியில் மின்னணுச் சான்றிதழ்கள் (Digital Certificates) வழங்கப்படும்.
- இறுதிச்சுற்று போட்டி குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இறுதிச்சுற்று போட்டி நடைபெறும் இடம்
இறுதிச்சுற்று போட்டிகள் நியூசெர்சியில் நடைபெற உள்ள வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 39 ஆவது தமிழ் விழாவில் நடைபெறும்.
நியூசெர்சி இறுதிச்சுற்று போட்டியில் பங்கேற்கும் செலவினை பெற்றோர்களே ஏற்க வேண்டும். பேரவை விழாவிற்கான நுழைவுக்கட்டணம், போக்குவரத்து மற்றும் தங்கும் செலவுகள் போன்றவை தேவைப்படும். மேலதிக விவரங்கள் பேரவை இணையத்தளத்தில் வெளியிடப்படும். பேரவை விழா குறித்த விவரங்களுக்கு: FeTNA Tamil Convention
போட்டியின் நடைமுறைகள்
வட்டாரச்சுற்று (Regionals)
- Recital Round - மாணவர்கள் தாங்கள் கற்ற குறள்களை வரிசையாகக் கூற வேண்டும்.
மண்டலச்சுற்று (Zonals)
- திருக்குறளின் பொருள் சார்ந்த கேள்விகள்
- ஒரு குறளின் "தொடக்க சொல்" கொடுத்து குறளைக் கூறச் சொல்லுதல்.
- ஒரு குறளின் அதிகாரம் கொடுத்து அதற்கான குறள்களைக் கூறுதல்.
- குறளுக்கு பொருளைக் கூறுதல்
- பொருளுக்குக் குறள் கூறுதல் - பொருள் கொடுக்கப்பட்டு, அதற்கான குறளைக் கூறுதல்.
காலிறுதிச்சுற்று (Quarter Finals)
- குறள் சார்ந்தக் கேள்விகள்
- திருக்குறள் சார்ந்த கேள்விகளுக்குப் பொருத்தமான குறளையும் அதன் பொருளையும் விளக்குதல்.
அரையிறுதிச்சுற்று (Semi Finals)
- குறள் சார்ந்தக் கதைகளை உருவாக்குதல்
- திருக்குறள்களை அடிப்படையாகக் கொண்டு அன்றாட வாழ்க்கை முறை சார்ந்த கதைகள் உருவாக்கி விளக்குதல்.
இறுதிச்சுற்று (Finals)
- குறள் ஒப்பித்தல் (கூடுதல் குறள்கள் வழங்கப்படும்)
- திருவள்ளுவர் மற்றும் குறள் சார்ந்தக் கேள்விகள்
- மேலதிக தகவல்கள் விதிமுறைகள் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளன
மதிப்பீடு மற்றும் தகுதித் தேர்வு
- அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் அடுத்தச் சுற்றுக்கு தகுதிப் பெறுவார்கள்.
- நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
விரிவான போட்டி விதிமுறைகள் பக்கம்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Judging Criteria
- சரியாகக் கூறுதல் (Correctness)
- சரளமாகக் கூறுதல் ( Fluency)
- தன்னம்பிக்கையுடன் கூறுதல் (Confidence)
