குறள் தேனீ : அரும்புகள் பிரிவு
குறள் தேனீ இறுதிச்சுற்று : அரும்புகள் பிரிவின் 70 திருக்குறள்களின் பட்டியல்
Use the Thirukural Print facility to take the print outs of Thirukural in your desired order – Thirukural Prints
32. இன்னாசெய்யாமை (Not doing Evil) குறள்கள்
314
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்.
பொருள்: இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.
English Version319
பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்.
பொருள்: முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.
English Version