குறள் தேனீ 2026 : அரும்புகள் பிரிவு – 35 திருக்குறள்களின் பட்டியல்

Use the Thirukural Print facility to take the print outs of Thirukural in your desired order – Thirukural Prints

குறள் 783

பொருட்பால் (Wealth) - நட்பு (Friendship)

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

பொருள்: பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.

Like taste in books good friendship grows
The more one moves the more he knows.

English Meaning: Like learning, the friendship of the noble, the more it is cultivated, the more delightful does it become.