குறள் தேனீ
குறள் தேனீ : இறுதிச்சுற்று : 150 திருக்குறள்களின் பட்டியல்
Use the Thirukural Print facility to take the print outs of Thirukural in your desired order – Thirukural Prints
அரும்புகள் பிரிவு : இறுதிச்சுற்று : 70 திருக்குறள்கள்
மொட்டுகள் பிரிவு : இறுதிச்சுற்று : 100 திருக்குறள்கள்
மலர்கள் பிரிவு : அனைத்து 150 திருக்குறள்களும்
2. வான் சிறப்பு (The blessing of Rain) குறள்கள்
12
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை.
பொருள்: உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.
English Version13
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி.
பொருள்: மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.
English Version18
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
பொருள்: மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடக்கும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.
English Version19
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்காது எனின்.
பொருள்: மழை பெய்யவில்லையானால், இந்தப் பெரிய உலகத்தில் பிறர்பொருட்டுச் செய்யும் தானமும், தம் பொருட்டுச் செய்யும் தவமும் இல்லையாகும்.
English Version