குறள் தேனீ
குறள் தேனீ : இறுதிச்சுற்று : 150 திருக்குறள்களின் பட்டியல்
Use the Thirukural Print facility to take the print outs of Thirukural in your desired order – Thirukural Prints
அரும்புகள் பிரிவு : இறுதிச்சுற்று : 70 திருக்குறள்கள்
மொட்டுகள் பிரிவு : இறுதிச்சுற்று : 100 திருக்குறள்கள்
மலர்கள் பிரிவு : அனைத்து 150 திருக்குறள்களும்
8. அன்புடைமை (Compassion) குறள்கள்
72
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்: அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.
பொருள்: அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர்; அன்பு உடையவர் தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.
English Version76
அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை.
பொருள்: அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்; ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது.
English Version79
புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு?
பொருள்: உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்?
English Version