குறள் தேனீ : இறுதிச்சுற்று : 150 திருக்குறள்களின் பட்டியல்

Use the Thirukural Print facility to take the print outs of Thirukural in your desired order – Thirukural Prints

அரும்புகள் பிரிவு : இறுதிச்சுற்று : 70 திருக்குறள்கள்

மொட்டுகள் பிரிவு : இறுதிச்சுற்று : 100 திருக்குறள்கள்

மலர்கள் பிரிவு : அனைத்து 150 திருக்குறள்களும்

 

குறள் 1025

பொருட்பால் (Wealth) - குடி செயல்வகை (The Way of Maintaining the Family)

குற்றம்  இலனாய்க்  குடிசெய்து  வாழ்வானைச்
சுற்றமாச்  சுற்றும்  உலகு.

பொருள்: குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.

Who keeps his house without a blame
People around, his kinship claim.

English Meaning: People will eagerly seek the friendship of the prosperous soul who has raised his family without foul means.