குறள் தேனீ : இறுதிச்சுற்று : 150 திருக்குறள்களின் பட்டியல்

Use the Thirukural Print facility to take the print outs of Thirukural in your desired order – Thirukural Prints

அரும்புகள் பிரிவு : இறுதிச்சுற்று : 70 திருக்குறள்கள்

மொட்டுகள் பிரிவு : இறுதிச்சுற்று : 100 திருக்குறள்கள்

மலர்கள் பிரிவு : அனைத்து 150 திருக்குறள்களும்

 

குறள் 385

பொருட்பால் (Wealth) - இறைமாட்சி (The Greatness of a King)

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

பொருள்: பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.

The able king gets, stores and guards
And spends them for people's safeguards.

English Meaning: He is a king who is able to acquire (wealth), to lay it up, to guard, and to distribute it.