திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 1063
பொருட்பால் (Wealth) - இரவச்சம் (The Dread of Mendicancy)
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும் வன்மையின் வன்பாட்டது இல்.
பொருள்: வறுமைத் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம், என்று கருதி முயற்சியைக் கைவிட்ட வன்மையைப் போல் வன்மையானது வேறு இல்லை.
Nothing is hard like hard saying "We end poverty by begging".
English Meaning: There is no greater folly than the boldness with which one seeks to remedy the evils of poverty by begging (rather than by working).