திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 1064
பொருட்பால் (Wealth) - இரவச்சம் (The Dread of Mendicancy)
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் காலும் இரவொல்லாச் சால்பு.
பொருள்: வாழ வழி இல்லாத போதும் இரந்து கேட்க உடன்படாத சால்பு, உலகத்தில் இடமெல்லாம் கொள்ளாத அவ்வளவு பொருமையுடையதாகும்.
All space is small before the great Who beg not e'en in want acute.
English Meaning: Even the whole world cannot sufficiently praise the dignity that would not beg even in the midst of destitution.