திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 1091
இன்பத்துப்பால் | காமத்துப்பால் (Love) - குறிப்பறிதல் (Signs speak the heart)
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோககொன் றந்நோய் மருந்து.
பொருள்: இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப் பட்ட நோக்கமாகும்; அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம்; மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.
Her painted eyes, two glances dart One hurts; the other heals my heart.
English Meaning: There are two looks in the dyed eyes of this (fair one); one causes pain, and the other is the cure thereof.
