திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 1099
இன்பத்துப்பால் | காமத்துப்பால் (Love) - குறிப்பறிதல் (Signs speak the heart)
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே யுள.
பொருள்: புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொதுநோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள ஓர் இயல்பாகும்.
Between lovers we do discern A stranger's look of unconcern.
English Meaning: Both the lovers are capable of looking at each other in an ordinary way, as if they were perfect strangers.
