இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 202

அறத்துப்பால் (Virtue) - தீவினையச்சம் (Dread of Evil Deeds)

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்

பொருள்: தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.

Since evil begets evil dire
Fear ye evil more than fire.

English Meaning: Because evil produces evil, therefore should evil be feared more than fire.