இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 257

அறத்துப்பால் (Virtue) - புலான்மறுத்தல் (Abstinence from Flesh)

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்

பொருள்: புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.

From eating flesh men must abstain
If they but feel the being's pain.

English Meaning: If men should come to know that flesh is nothing but the unclean ulcer of a body, let them abstain from eating it.