திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 262
அறத்துப்பால் (Virtue) - தவம் (Penance)
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம் அதனை அஃதிலார் மேற்கொள் வது.
பொருள்: தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.
Penance is fit for penitents Not for him who in vain pretends.
English Meaning: Austerities can only be borne, and their benefits enjoyed, by those who have practised them (in a former birth); it will be useless for those who have not done so, to attempt to practise them (now).