திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 321
அறத்துப்பால் (Virtue) - கொல்லாமை (Not killing)
அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும்
பொருள்: அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.
What is Virtue? 'Tis not to kill For killing causes every ill.
English Meaning: Never to destroy life is the sum of all virtuous conduct. The destruction of life leads to every evil.