திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 439
பொருட்பால் (Wealth) - குற்றங்கடிதல் (The Correction of Faults)
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை.
பொருள்: எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது.
Never boast yourself in any mood Nor do a deed that does no good.
English Meaning: Let no (one) praise himself, at any time; let him not desire to do useless things.