திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 449
பொருட்பால் (Wealth) - பெரியாரைத் துணைக்கோடல் (Seeking the Aid of Great Men)
முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாஞ் சார்பிலார்க்கு இல்லை நிலை.
பொருள்: முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.
No capital, no gain in trade No prop secure sans good comrade.
English Meaning: There can be no gain to those who have no capital; and in like manner there can be no permanence to those who are without the support of adherents.