திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 474
பொருட்பால் (Wealth) - வலியறிதல் (The Knowledge of Power)
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும்.
பொருள்: மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.
Who adapts not, outsteps measure And brags himself-his fall is sure.
English Meaning: He will quickly perish who, ignorant of his own resources flatters himself of his greatness, and does not live in peace with his neighbours.