இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 489

பொருட்பால் (Wealth) - காலம் அறிதல் (Knowing the fitting Time)

எய்தற் கரியது இயைந்தக்கால்  அந்நிலையே
செய்தற் கரிய செயல்.

பொருள்: கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.

When comes the season ripe and rare
Dare and do hard things then and there.

English Meaning: If a rare opportunity occurs, while it lasts, let a man do that which is rarely to be accomplished (but for such an opportunity).