இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 496

பொருட்பால் (Wealth) - இடன் அறிதல் (Knowing the Place)

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து

பொருள்: வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது.

Sea-going ship goes not on shore
Nor on sea the strong-wheeled car.

English Meaning: Wide chariots, with mighty wheels, will not run on the ocean; neither will ships that the traverse ocean, move on the earth.