திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 511
பொருட்பால் (Wealth) - தெரிந்து வினையாடல் (Selection and Employment)
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்.
பொருள்: நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.
Employ the wise who will discern The good and bad and do good turn.
English Meaning: He should be employed (by a king), whose nature leads him to choose the good, after having weighed both the evil and the good in any undertaking.