இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 550

பொருட்பால் (Wealth) - செங்கோன்மை (The Right Sceptre)

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்  பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.

பொருள்: கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.

Killing killers, the king, behold
Weeds removes from cropful field.

English Meaning: For a king to punish criminals with death, is like pulling up the weeds in the green corn.