திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 597
பொருட்பால் (Wealth) - ஊக்கமுடைமை (Energy)
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றும் களிறு.
பொருள்: உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.
Elephants are firm when arrows hit Great minds keep fit ev'n in defeat.
English Meaning: The strong minded will not faint, even when all is lost; the elephant stands firm, even when wounded by a shower of arrows.