திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 600
பொருட்பால் (Wealth) - ஊக்கமுடைமை (Energy)
உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார் மரம்மக்க ளாதலே வேறு.
பொருள்: ஒருவனுக்கு வலிமையானது ஊக்க மிகுதியே, அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே, (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு.
Mental courage is true manhood Lacking that man is like a wood
English Meaning: Energy is mental wealth; those men who are destitute of it are only trees in the form of men.