இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 678

பொருட்பால் (Wealth) - வினைசெயல்வகை (Modes of Action)

வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.

பொருள்: ஒரு செயலைச் செய்யும் போது அச் செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.

Lure a tusker by a tusker
Achieve a deed by deed better.

English Meaning: To make one undertaking the means of accomplishing another (similar to it) is like making one rutting elephant the means of capturing arother.