இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 721

பொருட்பால் (Wealth) - அவை அஞ்சாமை (Not to dread the Council)

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்

பொருள்: சொற்களின் தூய்மை தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவறின் அவையில் வாய்ச் சோர்ந்து பிழை சொல்லமாட்டார்.

The pure fail not in power of words
Knowing grand council's moods and modes.

English Meaning: The pure who know the classification of words having first ascertained the nature (of the court) will not (through fear) falter in their speech before the powerful body.