திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 723
பொருட்பால் (Wealth) - அவை அஞ்சாமை (Not to dread the Council)
பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத்து அஞ்சா தவர்.
பொருள்: பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர், கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே.
Many brave foes and die in fields The fearless few face wise councils.
English Meaning: Many indeed may (fearlessly) die in the presence of (their) foes; (but) few are those who are fearless in the assembly (of the learned).