திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 742
பொருட்பால் (Wealth) - அரண் (The Fortification)
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்.
பொருள்: மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.
A crystal fount, a space a mount Thick woods form a fort paramount.
English Meaning: A fort is that which has everlasting water, plains, mountains and cool shady forests.
