திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 80
அறத்துப்பால் (Virtue) - அன்புடைமை (Compassion)
அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.
பொருள்: அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்; அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல் போர்த்த வெற்றுடம்பே ஆகும்.
The seat of life is love alone; Or beings are but skin and bone!
English Meaning: Only a body filled with love holds a truly living soul; without love, it is merely bones covered with skin. Love is what gives life depth and meaning—without it, the body is just a lifeless form, lacking true spirit and vitality.