இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 924

பொருட்பால் (Wealth) - கள் உண்ணாமை (Not Drinking Palm-Wine)

நாண்என்னும் நல்லாள் புறம்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

பொருள்: நாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தக்காத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் செய்வாள்.

Good shame turns back from him ashamed
Who is guilty of wine condemned.

English Meaning: The fair maid of modesty will turn her back on those who are guilty of the great and abominable crime of drunkenness.