குறள் தேனீ
குறள் தேனீ : இறுதிச்சுற்று : 150 திருக்குறள்களின் பட்டியல்
Use the Thirukural Print facility to take the print outs of Thirukural in your desired order – Thirukural Prints
அரும்புகள் பிரிவு : இறுதிச்சுற்று : 70 திருக்குறள்கள்
மொட்டுகள் பிரிவு : இறுதிச்சுற்று : 100 திருக்குறள்கள்
மலர்கள் பிரிவு : அனைத்து 150 திருக்குறள்களும்
10. இனியவை கூறல் (The Utterance of Pleasant Words) குறள்கள்
92
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்.
பொருள்: முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப் பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.
English Version94
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
பொருள்: யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிப்படுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.
English Version95
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணிஅல்ல மற்றுப் பிற.
பொருள்: வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும், மற்றைய அணிகள் அணிகள் அல்ல.
English Version98
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்.
பொருள்: பிறர்க்குத் துன்பம் விளைவிக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.
English Version