குறள் தேனீ
குறள் தேனீ 2026 : திருக்குறள்களின் பட்டியல்
Use the Thirukural Print facility to take the print outs of Thirukural in your desired order – Thirukural Prints
அரும்புகள் பிரிவு : 35 திருக்குறள்கள்
மொட்டுகள் பிரிவு : 70 திருக்குறள்கள்
மலர்கள் பிரிவு : அனைத்து 100 திருக்குறள்களும்
18. வெஃகாமை (Not Coveting) குறள்கள்
171
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்
பொருள்: நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.
English Version
