குறள் தேனீ : இறுதிச்சுற்று : 150 திருக்குறள்களின் பட்டியல்

Use the Thirukural Print facility to take the print outs of Thirukural in your desired order – Thirukural Prints

அரும்புகள் பிரிவு : இறுதிச்சுற்று : 70 திருக்குறள்கள்

மொட்டுகள் பிரிவு : இறுதிச்சுற்று : 100 திருக்குறள்கள்

மலர்கள் பிரிவு : அனைத்து 150 திருக்குறள்களும்

 

39. இறைமாட்சி (The Greatness of a King) குறள்கள்

381

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.

பொருள்: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.

English Version

385

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

பொருள்: பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.

English Version

388

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

பொருள்: நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்.

English Version