குறள் தேனீ
குறள் தேனீ : இறுதிச்சுற்று : 150 திருக்குறள்களின் பட்டியல்
Use the Thirukural Print facility to take the print outs of Thirukural in your desired order – Thirukural Prints
அரும்புகள் பிரிவு : இறுதிச்சுற்று : 70 திருக்குறள்கள்
மொட்டுகள் பிரிவு : இறுதிச்சுற்று : 100 திருக்குறள்கள்
மலர்கள் பிரிவு : அனைத்து 150 திருக்குறள்களும்
50. இடன் அறிதல் (Knowing the Place) குறள்கள்
493
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின்.
பொருள்: தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர்.
English Version494
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின்
பொருள்: தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.
English Version497
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின்
பொருள்: (செய்யும் வழிவகைகமைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை.
English Version