குறள் தேனீ
குறள் தேனீ 2026 : திருக்குறள்களின் பட்டியல்
Use the Thirukural Print facility to take the print outs of Thirukural in your desired order – Thirukural Prints
அரும்புகள் பிரிவு : 35 திருக்குறள்கள்
மொட்டுகள் பிரிவு : 70 திருக்குறள்கள்
மலர்கள் பிரிவு : அனைத்து 100 திருக்குறள்களும்
6. வாழ்க்கைத் துணைநலம் (Spousal Goodness) குறள்கள்
55
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்எனப் பெய்யும் மழை.
பொருள்: வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!
English Version59
புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை.
பொருள்: புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர்முன் காளைபோல் நடக்கும் பெருமித நடை இல்லை.
English Version
