குறள் தேனீ
குறள் தேனீ 2026 : திருக்குறள்களின் பட்டியல்
Use the Thirukural Print facility to take the print outs of Thirukural in your desired order – Thirukural Prints
அரும்புகள் பிரிவு : 35 திருக்குறள்கள்
மொட்டுகள் பிரிவு : 70 திருக்குறள்கள்
மலர்கள் பிரிவு : அனைத்து 100 திருக்குறள்களும்
64. அமைச்சு (Ministers) குறள்கள்
635
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும் திறனறிந்தான் தேர்ச்சித் துணை.
பொருள்: அறத்தை அறிந்தவனாய், அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்.
English Version638
அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன்.
பொருள்: அறிவுறுத்துவாரின் அறிவையையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறல் கடமையாகும்.
English Version639
பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும்.
பொருள்: தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.
English Version
