குறள் தேனீ
குறள் தேனீ 2026 : திருக்குறள்களின் பட்டியல்
Use the Thirukural Print facility to take the print outs of Thirukural in your desired order – Thirukural Prints
அரும்புகள் பிரிவு : 35 திருக்குறள்கள்
மொட்டுகள் பிரிவு : 70 திருக்குறள்கள்
மலர்கள் பிரிவு : அனைத்து 100 திருக்குறள்களும்
66. வினைத்தூய்மை (Purity in Action) குறள்கள்
656
ஈன்றான் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை.
பொருள்: பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது.
English Version659
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை.
பொருள்: பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும், நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும்.
English Version
