குறள் தேனீ 2026 : திருக்குறள்களின் பட்டியல்

Use the Thirukural Print facility to take the print outs of Thirukural in your desired order – Thirukural Prints

அரும்புகள் பிரிவு : 35 திருக்குறள்கள்

மொட்டுகள் பிரிவு : 70 திருக்குறள்கள்

மலர்கள் பிரிவு : அனைத்து 100 திருக்குறள்களும்

 

88. பகைத்திறம் தெரிதல் (Knowing the Quality of Hate) குறள்கள்

878

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.

பொருள்: செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாவே அழியும்.

English Version

879

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த விடத்து

பொருள்: முள் மரத்தை இளையதாக இருக்கும் போதே வெட்ட வேண்டும், காழ்ப்பு ஏறி முதிர்ந்த போது வெட்டுகின்றவரின் கையை அது வருத்தும்.

English Version