குறள் தேனீ : மொட்டுகள் பிரிவு
குறள் தேனீ 2026 : மொட்டுகள் பிரிவு – 70 திருக்குறள்களின் பட்டியல்
Use the Thirukural Print facility to take the print outs of Thirukural in your desired order – Thirukural Prints
26. புலான்மறுத்தல் (Abstinence from Flesh) குறள்கள்
258
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
பொருள்: குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.
English Version259
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று.
பொருள்: நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.
English Version
