இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 1087

இன்பத்துப்பால் | காமத்துப்பால் (Love) - தகையணங்குறுத்தல் (Beauty's dart)

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.

பொருள்: மாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது.

Vest on the buxom breast of her
Looks like rutting tusker's eye-cover.  

English Meaning: The cloth that covers the firm bosom of this maiden is (like) that which covers the eyes of a rutting elephant.