திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 1094
இன்பத்துப்பால் | காமத்துப்பால் (Love) - குறிப்பறிதல் (Signs speak the heart)
யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும்.
பொருள்: யான் நோக்கும்போது அவள் நிலத்தை நோக்குவாள்; யான் நோக்காதபோது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.
I look; she droops to earth awhile I turn; she looks with gentle smile.
English Meaning: When I look, she looks down; when I do not, she looks and smiles gently.
