இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 1095

இன்பத்துப்பால் | காமத்துப்பால் (Love) - குறிப்பறிதல் (Signs speak the heart)

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.

பொருள்: என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத்தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள்போல் என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்வாள்.

No direct gaze; a side-long glance
She darts at me and smiles askance.

English Meaning: She not only avoids a direct look at me, but looks as it were with a half-closed eye and smiles.