இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 11

அறத்துப்பால் (Virtue) - வான் சிறப்பு (The blessing of Rain)

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

பொருள்: மழை பெய்ய உலகம் வாழ்ந்துவருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத் தக்கதாகும்.

The genial rain ambrosia call:
The world but lasts while rain shall fall.   

English Meaning: Rain sustains life on Earth, allowing all living things to survive and thrive; for this reason, it deserves to be called "ambrosia"—the nectar of life. Just as the mythical ambrosia was thought to give eternal life to the gods, rain nourishes the land, fills rivers, grows crops, and supports ecosystems. Without rain, life would wither, and the balance of nature would collapse. Therefore, rain is not just water—it is essential, life-giving, and precious, making it truly worthy of being seen as a divine blessing that keeps the world alive.