இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 2

அறத்துப்பால் (Virtue) - கடவுள் வாழ்த்து (The Praise of God)

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

பொருள்: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

That lore is vain which does not fall
At His good feet who knoweth all. 

English Meaning: What benefit do people truly gain from their learning if they do not honor the sacred feet of the One who embodies pure knowledge? This verse suggests that all intellectual achievements are ultimately hollow without reverence for the divine source of wisdom. Learning, in its highest form, should lead one to humility, respect, and a deeper connection to the ultimate truth or the divine.